குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த முடியும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தமது சொந்தங்களை நினைவு கூர்ந்து நிகழ்வு நடாத்துவது மனித உரிமைகளில் ஒன்று எனவும் அதனை தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனினும், இந்த மாவீரர் தின நிகழ்வுகளை அரசியல் நோக்கத்துடன் மேற்கொண்டிருந்தால் அது தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி கட்சி தெற்கில் உயிரிழந்த தமது உறுப்பினர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்; ஜே.வி.பி கட்சி தடை செய்யப்பட்ட ஓர் கட்சியல்ல எனவும் எனினும், வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கம் எனவும் வடக்கு மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து நிகழ்வு நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.