கிழக்கு சீனாவில் கோபுரம் ஒன்றின் மீது கட்டப்பட்டிருந்த தற்காலிக மேடை கவிந்து விழுந்ததில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உள்ளுர் நேரப்படி இன்று காலை 7மணியளவில் ஜியாங்ஷி மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் நடைபெற்ற இந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதுள்ளதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சாலைகளில் உள்ள பாதுகாப்பு தர குறைபாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்க தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் போன்றவற்றால் சீனாவில் இத்தகைய பெரும் தொழிற்சாலை விபத்துக்கள் இடம்பெறுகின்றிமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.