Home இந்தியாபாகிஸ்தான் பிரதமருக்கான வெளியுறவு விவகார ஆலோசகர் இந்தியாவுக்கு செல்கிறார் – போர்ப் பதற்றம் தணியுமா?

பாகிஸ்தான் பிரதமருக்கான வெளியுறவு விவகார ஆலோசகர் இந்தியாவுக்கு செல்கிறார் – போர்ப் பதற்றம் தணியுமா?

by admin


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் எதிர்வரும் மார்கழி 3 மற்றும் 4ஆம் திகதிகளில் நடக்கவுள்ள ஹார்ட் ஒப் ஏசியா உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமருக்கான வெளியுறவு விவகார ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசிடம் இருந்து இது தொடர்பான அதிகாரபூர்வமான தகவல் கிடைத்துள்ளதாகவும் அதில் சர்தாஜ் அஜிஸ் பங்கேற்பார் என தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறியுள்ளார்.

40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்  பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், ஆப்கானிஸ்தான்  ஜனாதிபதி அஷ்ரப் கனியும் சிறப்புரையாற்றவுள்ளனா்.

இந்தியா புறக்கணித்தமையினால்  பாகிஸ்தானில் நடைபெறவிருந்த  சார்க் உச்சி மாநாடு நிறுத்தப்பட்டது எனவும் ஆனால் பாகிஸ்தான் அப்படி  செய்யாது எனவும்  இந்தியாவில் நடக்கும் ஹார்ட் ஒப் ஏசியா உச்சிமாநாட் டில் பங்கேற்கும் எனவும்  இதன் மூலம் இரு தரப்புக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க வாய்ப்பு அமையும் எனவும்  சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More