Home இந்தியாஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சட்டத் திருத்த வரைபை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வன்முறை

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சட்டத் திருத்த வரைபை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வன்முறை

by admin

இந்தியாவின் ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சர்ச்சைக்குரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகர் மீது காலணியை வீசியும், ஒலிவாங்கியை உடைத்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சர்ச்சைக்குரிய 2 நில சட்டத் திருத்த வரைபு தொடர்பாக ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று சட்டப்பேரவை தொடங்கியதும் இச்சட்டத்திருத்த வரைபுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

கடும் அமளியால் முதல் பகுதியில் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை, பிற்பகல் 2 மணிக்கு கூடிய போது, நிலம் மற்றும் வருவாய் துறை அமைச்சர் அமல் பிவாரி சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த வரைபை அறிமுகம் செய்தார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கும், அமளிக்கும் இடையே, எவ்வித விவாதமும் இன்றி ஒரு சில நிமிடங்களில் சட்டத்திருத்த வரைபின் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் தினேஷ் ஓரானின் இருக்கையை நோக்கிச் சென்று அவரின் ஒலிவாங்கி உள்ளிட்ட பொருட்களைச் சேதப்படுத்தினர். இருக்கைகளை உடைத்து ஆங்காங்கே வீசியெறிந்தனர்.  இதேவேளை சபாநாயகரை நோக்கி உறுப்பினர் ஒருவர் காலணியை வீசினார். இச்சம்பவங்களுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More