182
பாகிஸ்தானை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது பூனை இறந்தமைக்காக நட்டஈடு கோரி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். சுந்தஸ்கோரின் எனும் வக்கீல் வளர்த்த பூனைக்கு உடல் நலம் குன்றியதனைத் தொடர்ந்து அதனை கால்நடை வைத்தியரிடம் காண்பித்துள்ளார்.
எனினும் நோயின் தாக்கம் அதிக ரித்தமையினால் வேறொரு வைத்தியரிடம் காண்பித்துள்ளார். எனினும் பூனை இறந்து விட்டது. வைத்தியர் அளித்த தவறான சிகிச்சை காரணமாகவே பூனை இறந்தது எனத் தெரிவித்து வைத்தியர் மீது 2 கோடி ரூபா நட்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
Spread the love