குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் இல்லை என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்திருந்த குறித்த மனுவில் தேசிய அரசாங்கமானது பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து நிறுவப்பட வேண்டும் என அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை இணைத்து நிறுவிய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் எனக் கூறமுடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
குறித்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.