தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை, விசேட ஜூரி சபை முன் இன்று நடைபெற்றது.
ரவிராஜின் கொலை தொடர்பான விசாரணை, ஜூரி சபையின் முன் விசாரிக்கப்பட வேண்டுமென பிரதிவாதிகள் தரப்பு விடுத்த கோரிக்கைக்கேற்ப திங்கட்கிழமை அதற்கான ஜூரிகள் சபை நியமிக்கப்பட்டு சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின. அந்த வகையில், இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூன்றாவது நாளாகவும் சாட்சி விசாரணை இடம்பெற்றது.
கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 10 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில், அறுவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களுள் மூவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய மூவரிடமும் தற்போது சாட்சி விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.