குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை புலனாய்வுப் பிரிவினரே கொலை செய்தனர் என குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சஹாப்டீனிடம், குற்ற விசாரணைப் பிரிவு இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளதுடன் லசந்த கொலை தொடர்பான விசாரணை அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
லசந்த கொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது சாரதியை கடத்திய நபர்கள் இராணுவப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. லசந்தவின் சாரதி அடையாள அணி வகுப்பின் போது சந்தேக நபர்களை அடையாளம் காண்பித்துள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.