குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நிறுவப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
பிணை முறி மோசடிகள் குறித்து துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாயின் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டியது அவசியமானதாகும் என தெரிவித்துள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோப் குழுவின் அறிக்கை சட்ட ரீதியான ஆவணமன்று எனவும் அதனைக் கொண்டு நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கும் சாட்சியங்களுக்கும் சட்ட ரீதியான அங்கீகாரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.