குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வறுமை ஒழிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தக் குழுவிற்கு அமைச்சர் சரத் அமுனுகம தலைமை தாங்க உள்ளார். 2017ம் ஆண்டை அரசாங்கம் வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரத் அமுனுகமவின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர்களான சஜித் பிரேமதாச, கபீர் ஹாசீம், ரவி கருணாநாயக்க ஆகியோரும் தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபயகோன், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். திட்டமொன்றை வகுத்து அதன் அடிப்படையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
00