குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிஸில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் அதிகாரிகள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இவ்வாறு ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் வாரம் வியாழக்கிழமை பாரிஸில் தாக்குதல் நடத்த இந்த நபர்கள் திட்டமிட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. ஈராக் அல்லது துருக்கியில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத தலைவர்களினால் இந்த சந்தேக நபர்களுக்கு உத்தரவிடப்படுவதாகவும் சந்தேக நபர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.