குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி; வேட்பாளர் கொலை வழக்கு தொடர்பில் கொலம்பிய புலனாய்வுத்துறை அமைப்பின் தலைவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் 1990-ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பத்திரிகையாளரான லூயிஸ் கார்லோஸ் காலன் என்பவர் 1989-ம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக அப்போது அங்கு கொலம்பிய புலனாய்வுத்துறை அமைப்பின் தலைமை பதவியில் இருந்த ஜெனரல் மிக்குவல் மாஸா மார்குயிஸ் என்பவர் லூயிசுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்ததுதான் கொலைக்கான காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள்இடமின்றி நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.