சோமாலியாவின் தலைநகர் மொகடுசுவில இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக் உயர்வடைந்துள்ளது. ஜனாதிபதி Sheikh Mohamud குண்டு வெடித்த இடத்திற்கு அருகாமையில் உள்ள பல்கலைக்கழகமொன்றுக்கு விஜயம் செய்திருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எந்தவொரு தரப்பும் உரிமை கோரவில்லை என்ற போதிலும்; தாக்குதலை அல் சஹாப் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு மேற்கொண்டிருக்கும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சோமாலியாவின் தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு
Nov 26, 2016 @ 16:19
சோமாலியாவின் தலைநகர் மொகடிஷூவில் காய்கறி சந்தை அருகே காருக்குள் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று இன்றைய தினம் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோராத நிலையில் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்களை மேற்கொண்டு வரும் அல் ஷபாப் அமைப்பே இந்த தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சோமாலியாவில் கடந்த சில வாரங்களாக பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு நவம்பர் 30ம் திகதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்தை வெளியேற்ற விரும்பும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இந்த தேர்தல் நடைமுறைகளை கடுமையாக எதிர்ப்பதுடன் தலைநகரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.