பிரதான செய்திகள் விளையாட்டு

தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்

south-africa-cricketகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ட்ரவெர் கொட்டார்ட் தனது 85ம் வயதில் காலமானார். சில காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொட்டார்ட் காலமானார். 1955ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரையில் தென் ஆபிரிக்க தேசிய அணியை  பிரதிநிதித்துவம் செய்திருந்த கொட்டார்ட்  தென் ஆபிரிக்க அணியின் சார்பில் 41 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 2516 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் 123 விக்கட்டகளையும் வீழ்த்தியுள்ளார்.

தென் ஆபிரிக்க கிரிக்கட் துறைக்கு கொட்டார்ட் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது என அந்நாட்டு கிரிக்கட் சபை இரங்கல் வெளியிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.