குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும்இலங்கை விவகாரம் குறித்த முன்னுரிமையில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
புதிதாக பதவி ஏற்றுக் கொள்பவர் எவ்வாறு செயற்படுவார் என்பதனை உறுதியாக கூற முடியாது என்ற போதிலும், இலங்கை குறித்த முக்கியத்துவம் குறையவில்லை எனவும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் எவ்வித அழுத்தங்களும் கிடையாது என அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.