குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுமுயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிராக கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. கோப் குழுவினை ரத்த செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ள சிலர் இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பங்களை திரட்டி வருகின்றனர்.
பிரதி அமைச்சர் ஒருவரினால் இந்த கையொப்பங்கள் திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன இந்த ஆவணத்தில் சில இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கோப் குழுவின் ஊடாக அன்றி ஏதேனும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றம் நேரடியாக கேள்வி எழுப்பி விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.