156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து இந்திய உளவுப் பிரிவான றோ இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரு க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்சேர்க்கும் நபர்கள் இலங்கையில் சஞ்சரிப்பதாகவும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கைக்கு பயணம் செய்ய இந்திய வர்த்தகர் ஒருவர் உதவியதாக கடந்த வாரத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love