சுவிட்சலாந்தில் அணு ஆலையை படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பது குறித்து மக்கள் இன்று வாக்களிக்கின்றனர். அங்குள்ள ஐந்து அணு ஆலைகளை மூடும் திட்டத்தை சுவிட்சலாந்து அரசாங்கம் அறிவித்ததுள்ள போதிலும் அதனை செயல்படுத்துவதற்கான திகதியை இதுவரை அறிவிக்கவில்லை.
45 வருடங்களுக்கு மேலாக செயல்படுகின்ற எந்த ஒரு அணு ஆலையும் செயற்படக்கூடாதென தெரிவித்துள்ள எதிர்கட்சிகள் ; குறைந்தது இரண்டு அணு ஆலைகளையாவது உடனடியாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை அணு ஆலைகளை உடனடியாக மூடுவது, மின்சார தட்டுபாட்டிற்கு வழிவகுக்குமென வர்த்தக தலைவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.