283
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய கிரிக்கட் அணியின் இரண்டு இளம் வீரர்களான கே.எல் ராஹூல் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் உபாதைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஹூல் இடது கை உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். வலைப் பயி;ற்சியின் போது பந்து கையில் பட்டு உபாதை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, ஹார்டிக் பாண்டியாவுக்கு வலது தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இருவரும் தீர்மானிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love