173
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என இந்திய பிரதமர் மோடி அறிவித்தமை தொடர்பில் இந்திய மத்திய அரசை கண்டித்தும், பொதுமக்களின் சிரமங்களை தீர்க்க கோரியும் தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
சென்னை பாரிமுனை ராஜாஜி வீதியிலுள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் அதிகமானோர் பங்கேற்றதாகவும் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love