ஊடகங்கள் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் தம்மீது தாக்குதல் நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என அவர் இன்றைய தினம் பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்பதன் அர்த்தம் பகிரங்கமாக அந்த ஊடகங்களை விமர்சனம் செய்தலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக நிறுவனங்களை தீக்கரையாக்க, ஊடகவியலாளர்களை கடத்த, ஊடகவியலாளர்களை கொலை செய்ய, இராணுவத்தைக் கொண்டு ஊடகவியலாளர்களை தாக்குவதற்கு எனக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மைப்போன்றே ஜனாதிபதியும் ஊடகங்களுக்கு எதனையும் சொல்ல வேண்டுமாயின் நேரடியாகவே பகிரங்கமாக சொல்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.