167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சீனா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமானது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சீனா மற்றும் இந்தியாவுடன் ஏன் உறவுகளைப் பேண வேண்டுமென சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருவதாகவும் அவ்வாறு உதவியை பெற்றுக்கொள்ளாவிட்டால் வேறு எங்கிருந்து உதவி பெற்றுக்கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா உதவியளிக்காவிட்டிருந்தால் ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love