162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கம்போடிய பிரதமர் Hun Sen இன் இலங்கைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கம்போடிய பிரதமர் இலங்கைக்கு வரவிருந்தார் என குறிப்பிடப்பட்டிருந்த போதும் தற்போது இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
பாகிஸ்தான், இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு கம்போடிய பிரதமர் செல்ல திட்டமிட்டிருந்த போதும் நாட்டில் சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டியிருப்பதனால் தாம் வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்வதாக கம்போடிய பிரதமர் அறிவித்துள்ளார்.
Spread the love