163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ள நிலைகள் மீது இஸ்ரேலிய யுத்த விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரால் முன்னதாக பயன்படுத்தப்பட்ட ஒர் முகாமை ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாகவும் அந்த இடத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவில் கட்டுப்பாட்டில் உள்ள Golan Heights என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்ரேலிய படையினர் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love