172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சட்டவிரோதமான முறையில் சந்தித்தார் என பெல்ஜிய இளவரசர் Laurent மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியம் விஜயம் செய்திருந்த போது இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதெனவும் நாட்டின் ராஜதந்திர விதிமுறைகளை பின்பற்றி இந்த சந்திப்பினை இளவரசர் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நடத்தப்பட்டதன் பின்னரே பெல்ஜிய வெளிவிவகார அமைச்சிற்கு இளவரசர் தரப்பு அறிவித்தல் வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love