துருக்கியின் தெற்குப் ஏற்பட்ட நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 3 அடுக்குமாடியைக் கொண்ட பாடசாலையின் விடுதி ஒன்றில் ஏற்பட்ட இந்த தீயானது விரைவில் எங்கும் பரவியதனால் உள்ளே சிக்கிய 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 11 பேர் 11 இலிருந்து 14 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகள் எனவும் மற்றையவர் விடுதி காப்பாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதியில் 34 பேர் தங்கியிருந்ததாகவும் தீ விபத்தில் காயமடைந்த 22 மாணவிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மின்சார கசிவு காரணமாகவே விபத்து நிகழ்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.