Home உலகம்துருக்கியின் பாடசாலை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியின் பாடசாலை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

by admin

துருக்கியின் தெற்குப் ஏற்பட்ட நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 3 அடுக்குமாடியைக் கொண்ட பாடசாலையின் விடுதி ஒன்றில்  ஏற்பட்ட இந்த தீயானது   விரைவில்  எங்கும் பரவியதனால்   உள்ளே சிக்கிய 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதில் 11 பேர் 11 இலிருந்து  14 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகள் எனவும் மற்றையவர் விடுதி காப்பாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதியில் 34 பேர் தங்கியிருந்ததாகவும்  தீ விபத்தில்  காயமடைந்த 22 மாணவிகள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில்  மின்சார கசிவு காரணமாகவே விபத்து நிகழ்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More