குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அடுத்து வரும் 12 மணித்தியாலங்கள் முதல் சூறாவளி வீச கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் அறிவித்து உள்ளனர். இது தொடர்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது,
திருகோணமலையிலிருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது, இத்தாழமுக்கம் யாழ் குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதே வேளை அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.
இதனால், முதலாம் திகதி நள்ளிரவு இத்தாழமுக்கமானது தமிழ் நாட்டின் வடபகுதியூடாக நகரும். அதனால் 2ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை காணப்படும் என வானிலை அவதானிப்பு நிலையத்தினால் தகவல் தெரிவித்துள்ளது என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது