278
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாவிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நாடு பிளவுபடாதிருப்பதனையும் புதிய அரசியல் சாசனம் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love