குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்iகியல் அரேபிய கலாச்சாரம் கொண்டு வரப்படுவதனை ஏற்க முடியாது என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குள் இஸ்லாமிய மதத்தை கொண்டு வருவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் அரேபிய கலாச்சாரம் உள்வாங்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
பௌத்த மதத்தைச் சேர்ந்த சிலரும் முகநூல் வழியாக வீரர்களாக மாற முயற்சித்து வருவதாகவும் இவ்வாறு பிரச்சாரம் செய்யும் எவருக்கும் தங்களது மதம் பற்றி போதிய தெளிவு கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் கடும்போக்குவாதத்தைப் பயன்படுத்தி பின்னர் அரசியலுக்குள் பிரவேசிப்பதே அவர்களின் நோக்கமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.