159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தை கைது நாடு கடத்தும் திட்டம் எதுவுமில்லை என உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார். எனினும், சில தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று குமார் குணரட்னத்தை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற குமார் குணரட்னத்தை விடுதலை செய்ய வேண்டுமென சில சிவில் அமைப்புக்கள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love