Home இந்தியாமுற்போக்குக் கவிஞர் இன்குலாப் காலமானார்.

முற்போக்குக் கவிஞர் இன்குலாப் காலமானார்.

by admin

முற்போக்குக் கவிஞர் இன்குலாப் இன்று காலமானார். கவிஞர், பேராசிரியர், பொதுவுடமைச் சிந்தனையாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்த  இவரின் இயற்பெயர் சாகுல் ஹமீது ஆகும்.  தனது பெயரை  புரட்சி என்ற பொருள்தரும் இன்குலாப் என மாற்றிக் கொண்ட இவரது  படைப்புகள்  சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், போராட்டங்களை மையப்படுத்தியே  அமைந்திருக்கும்.

புதுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த இன்குலாப் ‘சூரியனைச் சுமப்பவர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன் அதிகமான  கட்டுரைகள், நாடகங்களையும் எழுதியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளைப் பதிவு செய்யும் விதமாக ‘மனுசங்கடா… நாங்க மனுசங்கடா’ என்ற மேடைப் பாடலை கவிஞர் இன்குலாப்  எழுதியுள்ளார்

ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த அநீதியைக் கண்டித்து 2006-ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட கலைமாமணி விருதை தமிழக அரசிடமே திருப்பி அளித்த இன்குலாப்  சிற்பி இலக்கிய விருது, வைரமுத்து விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்குலாப் சிகிச்சை பலனின்றி  இன்றைய தினம் உயிரிழந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More