குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால், யாழ்மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இரவு முதல் மழையுடன் காற்று வீசி வருகின்றது. அத்துடன் குளிரான கால நிலை ஏற்பட்டு உள்ளது.
கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவத்தினர் எச்சரித்து உள்ளனர்.
இதேவேளை திருகோணமலையிலிருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது எனவும், இத்தாழமுக்கம் யாழ் குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதே வேளை இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது எனவும், இதனால், 2ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை காணப்படும் என வானிலை அவதானிப்பு நிலையத்தினால் தொிவிக்கப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.