குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம்; விடுதலை செய்யப்பட்டுள்ளார். வீசா சட்டங்ளை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனையும், 50,000 ரூபாஅபராதத்தையும் கேகாலை நீதிமன்றம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குமார் குணரட்னம் இன்றைய தினம் விடுதலை
Dec 2, 2016 @ 06:46
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட உள்ளார். சிறைத்தண்டனையை பூர்த்தி செய்து அவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்படுவார் என சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீசா சட்டங்ளை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனையும், 50,000 ரூபாஅபராதத்தையும் கேகாலை நீதிமன்றம் விதித்திருந்தது.
எதிர்வரும் 9ம் திகதியே குமார் குணரட்னத்தின் தண்டனைக்காலம் பூர்த்தியாக உள்ள நிலையில், கைதிகளுக்கு வழங்கப்படும் பொதுச் சலுகை அடிப்படையில் இன்றே விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குமார் குணரட்னம் பிரஜாவுரிமை கோரி முறையாக விண்ணப்பம் செய்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என உள்துறை அமைச்சர் எஸ்.பி.நாவீன்ன தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்னத்திற்கு தற்காலிக அடிப்படையில் நாட்டில் தங்கியிருக்க வீசா வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.