குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டத்தின் முன் அனைரும் சமமானவர்களே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டுமெனவும் அதன் ஊடாக நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகளவான தனியார் வாகனங்கள் மற்றும் தரம் குறைந்த பொதுப் போக்குவரத்து வாகனங்களினால் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் நாள்தோறும் வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கணிசனமான அளவினர் வாகன விபத்துக்களினால் நிரந்தர முடமை நிலையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி பிரபுப் பாதுகாப்புப் பிரிவினரும் வேகமாக தொடரணியாக வாகனங்களை செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், அவ்வாறு செலுத்துவோர் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் காவல்துறை பணிப்பாளருக்கு உத்தரவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.