அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 45 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலவும் கடும் வறட்சி காரணமாக தீயை அணைப்பதில் சிரமங்கள் தோன்றியுள்ளன.
இதன் காரணமாக 700 கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன.
கடந்த 28ம்திகதி அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டுப்பகுதி ஒன்றில் வைத்த தீ பரவியதன் காரணமாக டென்னிசி மாகாணத்தின் காட்லின்பர்க், பிஜியின் போர்ஜ் ஆகிய நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வறட்சி காரணமாக டென்னிசி மாகாணத்தில் இதுவரை 26 தடவை காட்டுத் தீ பிடித்துள்ளதன் காரணமாக 1200 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண விவசாய துறை தெரிவித்துள்ளது.