189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவிடமிருந்து, இலங்கை அரசாங்கம் இராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளது. சீன விமானங்களின் தரம் தொடர்பில் விமர்சனங்கள் செய்யப்பட்டு வரும் போதிலும், அவற்றில் தாம் பயணம் செய்துள்ளதாகவும் அவை சிறந்த முறையில் காணப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு இராணுவப் போக்குவரத்து விமானங்கள் கொள்வனவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை விமான நிலையங்களில் போதியளவு இடவசதி காணப்படுவதாகவும் இராணுவ விமானங்களை சுற்றுலாத்துறைக்காகவும் பயன்படுத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும்; தெரிவித்துள்ளார்.
Spread the love