குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்ச்சைக்கரிய தொலைபேசி அழைப்பு குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்திரவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் காவல்துறை மா அதிபரை சந்திக்க உள்ளனர்.
இரத்தினபுரியில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பு ஒன்றுக்கு பதிலளித்த விவகாரம் ஊடகங்களில் வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
யாரோ ஒர் நபரை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்ய மாட்டார்கள் எனவும் தாம் கைது செய்ய வேண்டாம் என கூறியதாகவும் காவல்துறை மா அதிபர் தொலைபேசியின் மறுமுனையில் அழைப்பினை ஏற்படுத்தியவரிடம் உறுதியளித்தமை ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
காவல்துறை மா அதிபரை இன்று சந்திக்க உள்ளதாக பிரதமரும் அடுத்த வாரத்தில் சந்திக்க உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரியவும் தெரிவித்துள்ளனர்.