Home இலங்கைஇரசாயன பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் – இலங்கை

இரசாயன பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் – இலங்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இரசாயன பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ஹேக்கில் நடைபெற்று வரும் இரசாயன ஆயுத பயன்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அல்லாத தரப்புக்கள் இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளமை ஆபத்தான நிலைமை என சுட்டிக்காட்டியுள்ளது.

இரசாயன ஆயுதப் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஆபத்துக்களை எதிர்நோக்க ஆயத்தங்களை செய்ய வேண்டுமெனவும் சுட்டிக்காட்யுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் இரசாயன ஆயுதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் இல்லாதொழிக்கவும் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More