குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு பாராளுமன்றம் எப்போது நேர்மையாக முனைப்புக் காட்டும் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை கொண்டு வருவதற்கும் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கும் அத்தியாவசியமான அரசியல் சாசனத் திருத்தங்களை மேற்கொள்ளுதல் அல்லது புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குதல் என்பனவற்றில் பாராளுமன்றம் எப்போது மெய்யாகவே முயற்சிக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கால்தில் இது தொடர்பில் ஆலோசனை குழுக்கள் நியமிக்கப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் அதில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் பண்டாரநாயக்க செல்வநாயகம் காலத்தில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடமளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்து வருகின்ற நிலையில், சில தரப்பினர் இனவாத மதவாத தூண்டுதல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இதுவே இறுதிச் சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார்