குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் காரணமாக ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு கோரி இந்தப் போராட்டம் இன்றைய தினம் நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் போரட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. போராட்டம் காரணமாக பொல்துவ சந்தி மற்றும் ஜயந்திபுர சந்தி ஆகிய பகுதியில் வீதிகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி மூடப்பட்டது
கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தி வருகின்ற போராட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
பொல்துவ சந்தி மற்றும் ஜயந்திபுர சந்தி ஆகிய பகுதியில் இவ்வாறு மூடப்பட்டுள்ளன. வீதியை மறைத்து போராட்டம் நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.