Home இலங்கைபோராட்டத்தில் ஈடுபட்ட கூட்டு எதிர்க்கட்சியினர் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் – ஐவர் காயம்

போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டு எதிர்க்கட்சியினர் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் – ஐவர் காயம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாடாளுமன்ற வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர்  மீது   காவல்துறையினர் மேற்கொண்ட  கண்ணீர்ப்புகைப் பிரயோகம்  காரணமாக ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு கோரி இந்தப் போராட்டம் இன்றைய தினம் நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் போரட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. போராட்டம் காரணமாக  பொல்துவ சந்தி மற்றும் ஜயந்திபுர சந்தி ஆகிய பகுதியில் வீதிகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி மூடப்பட்டது

road-closed

கூட்டு எதிர்க்கட்சியினர்  நடத்தி வருகின்ற  போராட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

பொல்துவ சந்தி மற்றும் ஜயந்திபுர சந்தி ஆகிய பகுதியில் இவ்வாறு மூடப்பட்டுள்ளன. வீதியை மறைத்து போராட்டம் நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More