குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இயலாமையுடன் கூடிய மக்களுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் இன்று 03-12-2016 கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை ஒன்பது முப்பது மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஆரம்பமாகிய இன் நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா , வடமாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் சார்பாக அவரது பிரதிநிதி ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .
மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இன் நிகழ்வில் மாற்று வலுவுடையோர்களின் நடன நிகழ்வுகள் ,கவிதைகள் என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றது அத்துடன் வடமாகாணத்தில் உள்ள கல்வி ,சுகாதாரம் ,போக்குவரத்து , சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஒரு குழுவினர்களால் சுட்டிக்காட்டப்பட வடமாகாண அமைச்சர்கள் பதிலளிக்கின்ற சொல்லாடுகளம் எனும் நிகழ்வும் நடைபெற்றமை இன் நிகழ்வின் சிறப்பே