165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈரானிய வர்த்தருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் மீளவும் உறுதி செய்துள்ளது. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக ஈரானிய வர்த்தகர் Babak Zanjani மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெருந்தொகை அரச பணத்தை மோசடி செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள இவருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்த நிலையில் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் தண்டனையை மீள் உறுதி செய்துள்ளது.
Spread the love