சபரிமலைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 360 கிலோகிராம் எடையுடைய வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாமி ஐய்யப்பன் கோவில் அருகே உள்ள சபரி பீடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில்; 12 பிளாஸ்டிக் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வெடிமருந்துகள் என்ன நோக்கத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சுவாமி ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை இடம்பெற்று வருகின்ற நிலையில் தீவரவாதிகளின் அச்சுறுத்தல்களும் காணப்படும் அதேவேளை டிசம்பர் 6ம் திகதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதனாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள உள்ளன. ஐய்யப்ப பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.