பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் காணிகளை பெற்றுக் கொடுப்பதில்லை என்பது தொடர்பாக வரவு செலவு திட்ட வாதீடுகளின் போது பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதற்கு இணங்க தற்போது பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு காணிகள் வழங்குவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி பாடசாலைகளுக்கு காணி ஒதுக்கீடு மேற்கொள்ளபட உள்ளதாகவும் காணி பிரச்சனை உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் தங்கள் கோரிக்கைகளை கல்வி வலையத்தின் ஊடாக கல்வி அமைச்சின் பெருந்தோட்ட கல்வி அபிவிருத்தி பிரிவிற்கு பாடசாலை அமைந்துள்ள இடம்¸ பெருந்தோட்ட நிறுவனம்¸ அடங்கலாக உடனடியாக அறிவிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர், 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை 22 கம்பனிகள் பொறுப்பேற்கும் போது அந்த ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 02 ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்தின் கீழ் பாரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்கும் காணிகள் இல்லை. இதற்கு ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பெருந்தோட்ட கைத்ததொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க¸ பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளத்தின் அதிகாரிகளுடான சந்திப்பு ஒன்றை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவாக பாடசாலைகளுக்கு காணிகளை வழங்குவதற்கான முடிவு எட்டபட்டுள்ளது. அதன் படி காணிகள் தேவையான பாடசாலைகளின் விபரங்கள் திரட்டபட்டு புவியியல் ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டு இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சவையில் சமர்ப்பித்து காணிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்; கொள்ளப்படவுள்ளன.
எனவே காணி பிரச்சனை உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் தங்கள் கோரிக்கைகளை கல்வி வலையத்தின் ஊடாக கல்வி அமைச்சின் பெருந்தோட்ட கல்வி அபிவிருத்தி பிரிவிற்கு பாடசாலை அமைந்துள்ள இடம்¸ பெருந்தோட்ட நிறுவனம்¸ அடங்கலாக உடனடியாக அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.