Home இலங்கைஅரசியல் சாசனம் தொடர்பில் போலிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது – சஜித் பிரேமதாஸ:-

அரசியல் சாசனம் தொடர்பில் போலிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது – சஜித் பிரேமதாஸ:-

by admin

அரசியல் சாசனம் தொடர்பில் போலிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நாடடுக்கும் பௌத்த மதத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் போலியான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனியொருவரை சுற்றியிருந்த அதிகாரம் மக்களிடம் ஒப்படைக்கும் நோக்கில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக பௌத்த மதத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More