குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
நாடு பாரிய நிதி நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக தலையீடு செய்து தீர்வு வழங்க வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணிப் பிரச்சினை பாரியளவில் உக்கிரமடைந்துள்ளதாகவும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பான அடிப்படை விடயங்கள் மூடி மறைக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில மாதங்களில் அமெரிக்க டொலரின் பெறுமதி 160 ஆக உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் நாட்டில் பொருட்களுக்கான விலைகளும் பாரியளவில் உயர்வடையக் கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.