தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றமில்லாததைத் தொடர்ந்து அவரது உடல் நிலை தேறும் வரை ஒரு இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை இன்று பிற்பகலில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பார் என தகவலகள் வெளியாகியுள்ளன.
கடந்த 74 நாட்களாக தொடர் சிகிச்சைப் பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு நேற்றையதினம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதனைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் ஒரு இறுக்கமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நலம் பெற்று வரவேண்டும் என பிரார்த்தனைகள் இந்தியா முழுவதும் தொடர்கின்ற சூழலில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்கஇ உடனடியாக பொறுப்பு அல்லது இடைக்கால முதல்வரை அறிவிக்க ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையிலிருந்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்கள்இ தலைமைச் செயலாளர் ஆகியோருடன் ஆளுநர் கலந்துரையாடி வருவதாகவும் ஜெயலலிதாவை அருகிலிருந்து கவனித்து வரும் சசிகலாவுடனும் தொடர்ந்து ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுஇ புதிய இடைக்கால முதல்வர் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.