143
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதத் தலைவர்களை சந்தித்து இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புபவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களும் இந்த சந்திப்பில் இணைந்து கொள்ள உள்ளனர்.
நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ எதிர்வரும் நாட்களில் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love